பிரதான செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம்

(அனா)

கோறளைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவின் ஏற்பாட்டில் படுக்கையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இயன்மருத்துவம் மற்றும் சமுதாய அடிப்படையிலான புனருத்தாரண நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

இப் பயிற்சி நெறியானது கோறளைப்பற்று சமூக சேவை பிரிவினால் கடந்த ஆறு மாதங்களாக செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருத்துவசிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை பராமரிப்பவர்களுக்கு பயிற்சி அழிக்கும் நிகழ்வு நேற்று 11.08.2016 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள பணிரெண்டு (12) கிராமசேவகர் பிரிவுகளிலிருந்து ஐம்பது (50) பேருக்கு புனருத்தாரண நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதுடன் இந் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பயனாளிகள் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தெரிவித்தார்.unnamed (2)

பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தில் நேற்று 11.08.2016 (வியாழக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை வைத்தியசாலையின் இயன்மருத்துவர் மஞ்சுளாகுமாரி கலந்;து கொண்டு பயிற்சியினை வழங்கினார்.unnamed

Related posts

21வது திருத்தம் பசிலுக்கு ஆபத்து! மொட்டு கட்சி இரண்டாக உடையும் அபாயம்.

wpengine

ஹக்கீம் ஹசனலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-01)

wpengine

உயர் தரத்தில் மூன்று சித்தியா? விண்ணப்பம் கோரல்

wpengine