பிரதான செய்திகள்

கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை

இன்றும் நாளையும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத சொத்துக்கள் அரசுடமையாக்கும் திட்டம் விரைவில் . . !

Maash

வவுனியாவில் கூகுள் வரைபடத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க தீர்மானம்: திலகநாதன் எம்.பி

Maash

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine