பிரதான செய்திகள்

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து எதிர்காலத்திலேயே தீர்மானிக்கவேண்டும்.

மாகாணசபைகளின் செயற்பாடுகள் உட்பட அதிகளவு அதிகார பகிர்வு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும், அது பிழையானது. நாங்கள் நாடாளுமன்றத்தினை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய பாதுகாப்பு மற்றும் துரிதமாக வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் குறித்து அதிக கவனத்தை செலுத்துவோம்.

மக்கள் இன்று உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் வாழ்கின்றனர், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்படுவதாக நாளாந்தம் செய்திகள் வெளியாகின்றன.

கோத்தபாய ராஜபக்ச மிகவும் திறமையான வேட்பாளர், அவர் தேசிய பாதுகாப்பினை மாத்திரமல்ல சட்டமொழுங்கையும் உறுதி செய்வார். அவர் ஏற்கனவே தனது ஆளுமையை நிருபித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டார் என என்னால் நிச்சயமாக தெரிவிக்க முடியும், அவர் பிரஜாவுரிமையை கைவிடவில்லை என சிலர் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மொட்டுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் 3நாள் மூடக்கம்- ராஜபஷ்ச

wpengine

மன்னாரில் சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும்! அமைச்சர் றிஷாட்டிற்கு பிரதி

wpengine

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட பரிசுப்பொதி

wpengine