பிரதான செய்திகள்

கோத்தபாய ராஜபக்சவுக்கும் ரவூப் ஹக்கீமுக்கிடையில் அண்மையில் தொலைபேசி உரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடந்துள்ளதாக தெரியவருகிறது.


கோத்தபாய பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இவரும் நட்புறவாக உரையாடியதாக கூறப்படுகிறது.

மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் ஹக்கீம், அண்மைய காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக அமைச்சர் சஜித் பிரேமதாச சம்பந்தமாக தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக ஹக்கீம் அண்மையில் பகிரங்கமாக கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்படாவிட்டால், ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கோத்தபாய அணியை நோக்கி தாவக் கூடும் எனவும் அப்படி நடந்தால், ஹக்கீம் தேசப்பற்றாளர் என எதிரணியினரால் போற்றப்படுவார் என்பதுடன் கோத்தபாய தான் இழந்துள்ள முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அது அமையும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள கட்சி என்பதே இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related posts

தென் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தருக்கு கொலை அச்சுருத்தல்

wpengine

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் கொலை

wpengine

இந்த அரசாங்கத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடாதது! தமிழ் பேசும் சமூகத்திற்கு சாட்டியடி

wpengine