சுயத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, பெரிய வர்த்தகர்களை கொழும்பு ஷங்கிரீலா ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
நான் இன்று 100 அடி பாதையில் நடந்து வந்து சிறிய மனிதர்களின் பொருளாதாரம் பற்றி பேசுகிறேன். நாட்டின் சிறிய மனிதர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஜே.ஆர்.ஜெயவர்தன திறந்த பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்தினார்.
அதற்கான சந்தர்ப்பத்தை ரணசிங்க பிரேமதாச உருவாக்கி கொடுத்தார். அவரது புதல்வரான ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து சிறிய மனிதர்களின் பொருளாதாரத்தை பாதுகாத்து தாருங்கள்.
கஷ்டமான காலம் ஒன்று இருந்தது. தமது சுயத்தொழில் முடிவடைந்த பின்னர் இங்கிருக்கும் நபர்கள் என்ன செய்வார்கள், சுயத்தொழில் செய்வோரின் எதிர்காலத்திற்காக காப்புறுதி முறையை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம்.
கோத்தபாய ராஜபக்சவின் தாமரை மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து பாதுகாப்பாக இருக்க முடியுமா?.
அப்படி இருக்க வேண்டுமாயின் செருப்புகளை கழற்றி விட்டு, ஓட்டப்பந்தயத்திற்கு பயன்படுத்தும் காலணிகளை அணிந்து ஓட நேரிடும்.
கோத்தபாயவிடம் அடிவாங்கும் போது ஓட நேரிடும். எமது அரசாங்கத்தில் அப்படி ஓட வேண்டிய தேவை இருக்காது.
எமக்கான ஜனாதிபதி ஒருவர் இல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தோம்.
இதனால், எமது ஜனாதிபதி, எமது மாகாணசபை, எமக்கான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்று தாருங்கள்.
அப்போது ரொக்கட்டை போல் முன்நோக்கி செல்வோம். அதற்கு சஜித் பிரேமதாச சக்தியாக இருப்பார் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.