பிரதான செய்திகள்

கோதுமை மாவின் விலை இன்று முதல் 8 ரூபாயினால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை இன்று முதல் 8 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பிரிமா நிறுவனத்தின் கோதுமை மா உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


பாண், பனிஸ் உட்பட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை பிரிமா நிறுவனம் இன்னும் அறிக்கவில்லை.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

wpengine

சமுகத்தை பற்றி சிந்திக்காமல்!புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம்

wpengine

முல்லைத்தீவு, மல்லாவி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

Editor