அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச கைது, கம்மன்பில யூகம், உயிர்த்த ஞாயிறு தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் எனவே தோன்றுகின்றதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது. அவை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுபவையல்ல.

அது விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினரின் கடமையாகும். விசாரணை முன்னெடுக்கும் திணைக்களங்கள் கூறினால் மாத்திரமே நாமும் அறிவோம். எனவே யார் எப்போது கைது செய்யப்படுவார் என்பது எமக்குத் தெரியாது.

அவ்வாறிருகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார் என்பதும் எமக்கு தெரியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிப்பர் ஒருவேளை அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அனைத்தும் தெரிந்திருக்கலாம்.

அதனால்தான் யார் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே கூறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

 “வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

Maash

ஜனாதிபதியின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஸ்ரீ ரங்காவுக்கு பிணை!

Editor

மண் அகழ்வு சடலம்! நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

wpengine