பிரதான செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுகின்ற போதும் நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தது.


இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.


இதன்பின்னரே போட்டியிடும் விதம் குறித்து அறிவிக்கப்படும் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.


நேற்று மாலை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


ஏற்கனவே அந்த கட்சி நுவரெலியா, வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்திருந்தது
பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையிலேயே ஜனாதிபதி, பிரதமருடனான சந்திப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கில் இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.ச இணக்கம் – டெனிஸ்வரன்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு! சரத் பொன்சேகாவும் பங்கேற்பு!

wpengine

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இந்த ஆடைகளை அணிய வேண்டும்.

wpengine