செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை..!

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடலின் சொந்தக்காரரான தர்மராஜா கார்த்திகா, கொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக மரண தண்டனை விதித்துள்ளார். 

குறித்த குற்றச் செயலை மேற்கொண்ட பெட்ரிக் கிருஸ்ணராஜா என்ற நபர் இவ்வாறு பெண்ணின் உடலை பயணப்பொதியொன்றில் சூட்சுமமாக மறைத்து பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் வைத்துச் சென்றுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிரான வழக்கு 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (24)மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த நபருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

தீர்ப்பை வழங்குவதில், நீதிபதி படபெண்டிக, கிருஷ்ணராஜாவுக்கு எதிரான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாகவும், மரண தண்டனையை நியாயப்படுத்துவதாகவும் கூறினார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை.

wpengine

“முத்தலாக்” சட்டவிரோதமானது

wpengine