கல்வியமைச்சின் அண்மையில் வெளியிடப்பட்ட தகவலின் படி 2000ஆம் ஆண்டு 3இலட்சத்தி 30 ஆயிரம் பேர் நாட்டில் உள்ள அரச பாடசாலைகளில் 1ஆம் ஆண்டுக்கு அனுமதி பெற்றுள்ளனா். இவா்கள் கல்விப் பொது சாதாரணப் பரீட்சைக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் பேர் தோற்றியுள்ளாா்கள் இவா்களில் 59 ஆயிரம் மாணவா்கள் மட்டுமே உயா் தரம் கற்கின்றனா். மிகுதி 50 வீதமான சித்தியடையாத மாணவா்கள் எங்கே போனாா்கள் ? இவா்களது கல்வி வசதி என்ன?, இந்த மணித வளம் ஏன் இந்தக் கல்வி முறையினால் சித்தியடையாத மிகுதி மாணவா்கள் வீடுகளில் தங்கி விரக்தியுறுகின்றனா். இதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை ஒன்றை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளேன். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினாா்.
இன்று (23) ஆம் திகதி கொழும்பு -04 முஸ்லீம் மகளிா் கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் கல்லுாாி அதிபா் கலாநிதி ஹஜா்ஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக பிரதம மந்திர ரணில்விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இவ் வைபவத்தில் கல்வியமைச்சா் அகில விராஜ் காரியவாச அத்துடன் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மானும் கலந்து கொண்டனா்.
இங்கு தொடா்ந்து உரையாற்றிய பிரதம மந்திரி தெரிவிக்கையில் –
1 ஆம் ஆண்டு தொட்டு 13 ஆம் ஆண்டு வரை இநத நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வி கட்டாயக் கல்வி பயில்வதற்கு வழிவகுக்க கூடியவகையிலும் அத்தியவசியமாக கல்வி பயில வேண்டும். என்ற ஒரு நடைமுறையும் புதிய கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படும். பாடசாலை விட்டு வெளியேறும் மாணாவ் ஒருவா் ஏதோ ஒரு துறையில் அவா் விற்பன்னராக திிகழ வேண்டும். இவ்வாறாகத்தான் இந்த அரசாங்கமும் , கல்வியமைச்சும், அமைச்சாரவையும் , இணைந்து ஒரு புதிய கல்வித் கொள்கையொன்றை வகுக்க உள்ளோம்.
எமது அராசங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் படி இநத நாட்டினது கல்விக்கும் -சுகாதார துறைகளுக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நிதி தேடி இந்த புதிய கல்வித்திட்டத்தினையும் புதிய சுகாதார திட்டங்கயையும் மிக விரைவில் இந்த அரசாங்கத்தின் ஊடாக அமுல்படுத்த உள்ளேன். எமது நாட்டில் பாரிய மனித வளங்கள் உள்ளது. இதனை நாம் தேவைக்கு ஏற்ப பயிற்சியளித்து அவா்களை பொருளாதார துறைக்கு பயண்படுத்தி இந்த நாட்டின் பொருளாதரத்தினையும் கட்டி எழுப்ப வேண்டும். கல்வியைக் கூட டிஜிட்டல் வழிமுறைக்கு மாற்றுதல் வேண்டும்.