செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு பிரதான பஸ் நிலையம் , பஸ் டயரில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

பஸ் வண்டி ஒன்றின் பின் சில்லில் தனது கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் இடம் பெற்றுள்ளது…..

கண்டியை நோக்கி பிற்பகல் 4 மணியளவில் புறப்படத் தயாராக இருந்த பஸ் வண்டியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உரிய நேரத்தில் பஸ் வண்டியை சாரதி செலுத்திய போது கழுத்து நசுங்கிச் சிதறிய இவரை வைத்தியசசாலையில் அனுப்பப்பட்ட பின் இவர் அங்கு மரணமடைந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட 30 வயது மதிக்கத்தக்க நபர் பஸ் வண்டியின் அடியில் நுழைந்து சில்லில் கழுத்தை வைத்து தன் கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் இவரது சட்டைப் பைக்குள் இருந்து அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அதில் வசிப்பிடம் சாய்ந்த மருது என குறிப்குறிப்பிடப்பட்டுளள்ளது.

இதைத் தொடர்ந்து அடையாள அட்டையில் உள்ள சாய்ந்தமருது முகவரியை பொலீசார் தேடிச் சென்ற போது அப்பெயருக்குரிய இளைஞர் அவ்வீட்டில் இருந்துள்ளார்.

மேற்படி அடையாள அட்டை குறித்து அவ்விளைஞர் பதிலளிக்கையில் அது தன்னுடைய அடையாள அட்டை எனவும் கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் தனது மணிபர்சுடன் அது திருடப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதிலிருந்து மேற்படி மரணமான நபர் பஸ் நிலையத்துக்கு வருவோரின் பொருட்களை திருடும் போதைக்கு அடிமையான ஒரு நபராக இருக்கலாம் என பொலீசார் சந்தேகிக்கின்றனர்?

இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Related posts

மொட்டுக்கட்சிக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும்! வேறு யாருக்கும் பதவி வழங்க விடமாட்டோம்.

wpengine

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

wpengine

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine