பிரதான செய்திகள்

கொழும்பு – கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

கொழும்பு – கொச்சிக்கடையை அண்டிய பகுதியில் பாதுகாப்பு படையினரால் பாரிய குண்டு வெடிப்பொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
வெடி குண்டு காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை சற்று முன் மேற்கொள்ளப்பட்டது.

வாகனமொன்றிலிருந்து மீட்கப்பட்ட குறித்த
வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயற்சித்த போதே பாரிய சத்தம் கேட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

இலங்கையில் நேற்றைய தினம் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது.

Related posts

வஸீம் தாஜுதீன் அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

wpengine

13 இந்திய மீனவர்களை தலா ரூ.50,000 அபராதம் விதித்து, விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் .

Maash

இலங்கை அணிக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து செய்தி

wpengine