பிரதான செய்திகள்

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாள்

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.

நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது.

நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

நேற்று இரவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சரவை புதன் கிழமை நியமனம்

wpengine

தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் ஏமாறுவதற்கு தயாரில்லை

wpengine

கல்குடா உலமா சபையின் நிவாரண உதவித் திட்டத்திற்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் நிதியுதவி

wpengine