பிரதான செய்திகள்

கொழும்பு அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக நிதியாளர் வஹாப்தீன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி மீளகையளிப்பு

06.03.2017 திங்கட்கிழமை மட்/ஷரீப் அலி வித்தியாலத்திற்கு அப்பாடசாலையின் ஆசிரியர் அஷ்ரப் அலி ஊடாக கொழும்பு அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக நிதியாளர் வஹாப்தீன் அவர்களினால் வழங்கப்பட்ட 10,000.00 ரூபா நிதி மீள அப்பாடசாலையின் அதிபரினால் கையளிக்கப்பட்டதுடன் ஸஹாபாக்களை நேசிப்போர் ஒன்றியத்தினால் அதிபா் காரியாலயத்திற்கு தேவையான சுமார் 10,000.00 ரூபா பெறுமதியான தரை காபா்ட் அப்பாடசாலை நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக நாங்கள் அதிபரிடம் சென்று வினவியபோது பாடசாலையின் தேவைகளை அப்பாடசாலையின் ஆசிரியா்கள் மற்றும் சமூக ஆர்வலா்கள் நிவா்த்தி செய்வதற்காக ஒவ்வொரு விடயங்களை பொறுப்பெற்கும் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொறு விடயத்தினையும் நிவா்த்தி செய்து தருவதாக பொறுப்பேற்றனா் அச்சமயம் கூட்டத்திலிருந்து எமது பாடசாலையின் ஆசிரியா் அஷ்ரப் அலி அதிபா் காரியாலத்திற்கு தரை கார்பட்டினை தான் செய்து தருவதாக ஒப்புதல் அளித்தார்.

அதற்கு மாற்றமாக அவா் கொழும்பு அல் முஸ்தபாசர்வதேச பல்கலைக்கழக நிதியாளர் வஹாப்தீன் அவர்களுக்கூடாக இந்நிதியினை வழங்கி சமூக வளைதளங்களில் செய்தியை வெளியிட்டடிருக்கிறார் இவ்வாறன பதிவு வரும்வரை நான் அறிந்திருக்கவில்லை ஆகவே அவரிடமிருந்து பெறப்பட்ட நிதி மீள கையளிக்கபட்டதுடன் அத்தேவையினை ஸஹாபாக்கள் நேசிப்போர் ஒன்றியத்தினூடாக எமக்கு கிடைக்கப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

எமது பாடசாலையின் வளா்ச்சியில் அதீத கவனம் செலுத்தும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Related posts

முழுமையாக முடங்கிய மன்னார்!

Editor

3 ஆயிரத்து 626 பேருக்கு ஆசிரியர் நியமனம்

wpengine

அஸ்கிரிய பீடம் கண்டனம்! வட,கிழக்கில் இடம்பெறும் காடழிப்பை ஜனாதிபதி தடுக்க வேண்டும்

wpengine