(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு அகதியாவின் 34 வது வருடாந்த விழாவும் அகதியா மாணவா்களது பரிசலிப்பு விழாவும் இன்று (ஏப்ரல் 4) கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போா் கூடத்தில் கொழும்பு அகதியாவின் தலைவா் சஜித் சஹிதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் அகதியாவின் வருடாந்த இதழின் முதற்பிரதி புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். அகதியா பற்றி ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் உரையாற்றினாா்.