பிரதான செய்திகள்

கொழும்பில் 28ஆவது வீர மக்கள் தினம் அனுஷ்டிப்பு

28ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related posts

ரணிலுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் சந்திப்பு

wpengine

4 மாதங்களுக்குரிய சம்பளம், முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு

wpengine

சிஐடிக்கு ஆஜராவது இப்போது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது..!

Maash