பிரதான செய்திகள்

கொழும்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் றிசாத் நேரடி விஜயம்

(சுஐப் எம்.காசிம்) 

பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டார். இந்தப் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பில் அமைச்சர் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் அவசரமாக படகுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார்.

அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இன்று காலை  (18/௦5/2016) இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பல படகுகளை அங்கு அனுப்பி வைப்பது தொடர்பில் அமைச்சர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளை அடுத்து, மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், முஹம்மத் பாயிஸ், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா, சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வென்னவத்தை, கொத்தட்டுவ, பிரெண்டியாவத்தை, மாதம்பிட்டிய, புத்கமுவ, ஐடிஎச், மெகொட கொலன்னாவ, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்கள் படும் துன்பங்களை அறிந்துகொண்டனர்.1099f5f9-4884-4b7c-94e9-e404d2ccd830

அத்துடன் படகுகள் பயன்படுத்த முடியாது வெள்ளத்தில் அமிழ்ந்துள்ள வீடுகளில் உள்ள மக்களை, தெப்பங்கள் மூலம் வெளியேற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை டயர், கயிறு போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு கொண்டுவருவது தொடர்பான ஏற்பாடுகளை அக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.b664a54f-1f69-47f7-bac6-2061ae1aa1b7

அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (18/05/2016) வெளிநாடொன்றுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்ததினால், தனது கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து, மக்கள் படும் கஷ்டங்களை நிவர்த்திப்பதற்கு என்னென்ன வழிகளில் முடியுமோ, அத்தனை வழிகளையும் உபயோகிக்குமாறு பணிப்புரை விடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கவனிப்பதில் முன்னுரிமை வழங்குமாறு கோரினார். இதேவேளை மல்வானையில் பாதிக்கப்பட்ட 200 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.    6eabc1e1-c308-478e-a475-72fc526613c0                                   f837a366-4f01-48d3-91cb-ef069a464772

Related posts

மஹிந்த மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் சல்மான் ராஜினாமா

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரி அதிகரிப்பு!

Editor