அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை . – ஜனாதிபதி .

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களை போலல்லாது , அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். 

தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைத்துள்ளது. 

அத்துடன் கொள்ளை மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட மாட்டாது என்றே தாம் குறிப்பிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இடம்பெறாது என கூறியதாக எதிர்க்கட்சியினர் கவலை வெளியிடுகின்றனர்.

ஆனால் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயமாக நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் “WhatsApp“ வர இருக்கின்ற ஆப்பு (விடியோ)

wpengine

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine

13 இந்திய மீனவர்களை தலா ரூ.50,000 அபராதம் விதித்து, விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் .

Maash