Breaking
Sun. Nov 24th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

இன்று (25) கொலன்னாவ ஜூம்ஆ பள்ளிவாசலில் ஊடகவியலாளா் மாநாடு  ஒன்று நடைபெற்றது.   இம் மாநாட்டின் போது கொலன்னாவை பௌத்த விகாரையின் பிரதான தேரா்  வஜிர தேரா் கலந்துகொண்டு  ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில்.

கொலன்னாவையில் இன்னும் இன்னும் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். அதில் மீள நிர்மாணிக்கப்பட உள்ள பள்ளிவாசலுக்கு முதல் முதலில்  நானே சீமெந்துப் பக்கட்டுக்களை வழங்கி நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து  வைப்பேன். கடந்த 10 நாற்களாக நடைபெற்ற கொலன்னாவைப் பகுதி வெள்ளப் பெருக்கில்  பள்ளிவாசல்கள் சம்மேளத்தினாலேயே வெள்ளத்தினால் பாதிக்கபட்ட  மக்களை நன்றாக கவனித்து வருகின்றனா். அத்துடன் எங்களது பௌத்த பண்சலையில் உள்ள பாதிக்கபட்ட மக்களுக்கு  உடன் சமைத்த உணவு தொட்டு இன்று வரையிலான 10 நாற்களுக்கும் போதிய பொருள் பண,  உதவிகளைச் தாராளமாகச்  செய்ததுவருகின்றனா். ஆகவே தான் எமது பிரதேசத்தில் கூடுதலான பள்ளிவாசல்கள்  நிர்மாணிகக்ப்படல் வேண்டும் .

SAMSUNG CSC
முஸ்லீம்கள்  வேறு பிரதேசங்களில் இந்தப் பள்ளிக்கு  வழங்கிய உதவிகளை 50 -50 வீதமாக வெள்ளவத்தினால் பாதிக்கப்பட்ட பெளத்த மக்களுக்கும்  கவனித்து வருகின்றனா். இந்தப் பள்ளிவாசல் தலைவா் ஹனீப் ஹாஜி தலைமையில் சமைத்த உணவு தொட்டு உறங்குவதற்கு  பெட்சீட் வரையிலான பொருட்கள்  கடந்த 10 நாற்களாக  கிடைக்கப் பெற்றது. எங்களது பௌத்தா்கள் அல்லது அரசின் உதவிகள் தற்பொழுதுதான்  எங்களுக்கு கிடைத்து வருகின்றது. அதனை விட ஆபத்துக்கு உதவியவா்கள் இப்பிரதேச  முஸ்லீம்கள் ஆவாா்கள். அது மட்டுமல்ல . பேருவளை – நீர்கொழும்பு பிிரதேசத்தில் இருந்து இயந்திரபடகுகளையும்  தருவித்து எங்களை கரைசோ்த்தாா்கள். என தேரா் தெரிவித்தாா்.
இங்கு உரையாற்றிய பள்ளிவாசல்கள் தலைவா் ஹனீப்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நாட்டில் உள்ள பல பிரதேசங்களது முஸ்லீம்கள் உதவினாா்கள். இப்பள்ளி சகல இனத்துக்கும் உதவிவருகின்றது. சாதி, மத இன வேறுபாடின்றி நாம் உதவுகின்றோம். இங்கு பள்ளியில் 2000ஆயிரம் தொட்டு 8 ஆயிரம் உணவுப் பாா்சலைகளை சமைத்து சகல இனமக்களுக்கும் பரிமாறியுள்ளோம் இங்கு 100க்கும் மேற்பட்ட உலாமாக்கள், மத்ரசா மாணவா்கள் தங்கி நின்ற உதவுகின்றனா். அந்த அடிப்படையில் தான் நாங்கள் பௌத்த தமிழ் மக்களுக்கும் இங்கியிருந்து உதவுகின்றார் இதில் எவ்வித குறைபாடுகள் மின்றி எங்களது முஸ்லிம் தனவந்தா்கள் அரசியல் வாதிகள் வேறு முஸ்லிம் ஊாா்களின் இருந்தெல்லாம் நிவாரணம் கிடைக்கப்பெற்றது. அம் மக்களுக்கெல்லாம் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக நன்மையை இறைவன் அவா்களுக்கு வழங்குவான் என ஹனீப் ஹாஜி தெரிவித்தாா்.

SAMSUNG CSC
பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், மன்னாா் முபாராக் மௌலவியும் இங்கு கருத்துத் தெரிவித்தனா்.

SAMSUNG CSC

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *