கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடத்தப்பட்டிருந்தது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக கணக்காளர், பிரதேச செயலாளர்கள், முப்படையினை சேர்ந்தவர்கள் பொலிஸார், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,
பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க எவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது, முல்லைத்தீவு மாவட்ட மக்களை பாதுகாப்பதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

