உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 200,000 த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15,000,000 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 173,123 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,429,564 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிரிப்பைத் தொடர்ந்து தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும்

wpengine

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

wpengine

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor