தேசமான்ய இர்சாத் றஹ்மத்துல்லா
கொரோனா தொற்று தொடர்பில் பல தற்பாதுகாப்பு முறைகள் தொடர்பில் விசேட குடும்ப நல வைத்தியர் முஹம்மத் அப்துல்லாஹ் முஹம்மத் ஜெஸீம் பொதுமக்களின் நலன் குறித்து ஆக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.இந்த பீதி நிலைமையை நாம் எவ்வாறு சமாளிப்பது?நாமும் COVID-19 உம்நம்மிடையே இவ்வகை கொரோனா வைரஸ் தொற்று பற்றிய தரவுகள் சமூக வலை தளங்களினூடாகவும் இதர செய்திகள் வாயிலாகவும் நிறைந்து கிடக்கிறன. மார்ச் 11, 2020 முதல் COVID 19 தொற்றை WHO எனும் உலக சுகாதார அமைப்புஆனது ‘Pandemic’ என்னும் பத்த்தின் மூலமாக உலகளாவிய நோயாக அறிவித்துள்ளது. Pandemic தொற்றுநோய் என்றால் என்ன?ஒரு புதிய தொற்று நோயின் “உலகளாவிய பரவல்” என்று இதனை வரையறுக்கலாம். அதேசமயம், ஒரு நோயானது epidemic எனும் போது அது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகக் குறிப்பிட்ட பிராந்தியத்தில் பரவுவதாக பொருள்படும். இவ்வாறான பதங்கள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலிற்கமையவே சூட்டப்படுகின்றன.ஒரு நோயை pandemic தொற்றுநோயாக அறிவிப்பதால் பொது மக்களான எமக்கு என்ன நன்மை ?இத்தொற்றுநோய் எவ்வளவு தீவிரமானது என்பதற்கும் pandemic எனும் பதத்துக்கும் இடையே பெரிய தொடர்பை எதிர்பார்க்க முடியாது மாறாக நோயின் பரம்பலே இதனுடன் பெரிய தொடர்பைக் கொண்டுள்ளது.
ஒரு நோய் தீவிரமாக பரவுகின்றது என்றுதான் இதன் மூலம் அர்த்தம் கொள்ளலாம். தொற்றிலிருந்து தவிர்ப்பதற்கான ஆயத்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு அப்பிராந்திய அரசாங்கங்களை இவ்வாறான பெயரிடுகைகள் தூண்டுகின்றன. மேலும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் அவசரகால நோய்க்கெதிரான நடைமுறைகளை எடுக்கவும் இவ்வாறான WHO இன் அறிவிப்பு இன்றியமையாதது.
அதாவது பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள அப்பிரந்திய நாடுகளுக்கு WHO இனால் வழங்கப்படும் சமிஞ்சையாக இதனைப்பார்க்கலாம். ஏற்கனவே COVID-19 ஐ ஒரு சர்வதேச அவசரத்தொற்றாக அறிவித்ததன் மூலம் இவ் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும், உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முன்னேற்பாட்டையும், நோய்பற்றிய தரவுகள், சிகிச்சை பற்றிய சுற்றறிக்கைகள் ஆகியவற்றை செவ்வனே செய்யவும் pandemic எனும் இவ்வறிவிப்பு உதவுகிறது.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வைரஸ் பரவும் முறைகளைக் கண்டறியவும், இது பரவும் தொடர்சங்கிலியை நலிவடையச் செய்யவும், சுகாதார அதிகாரிகளை உசாத்துனை அடையச் செய்யவும் இவ்வாறான செய்முறைகளினூடாக இந்நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆரோக்கியமான உத்தியாகவே இதனை தமர் காண வேண்டும். இவ்வாறான தொற்றானது, உலகின் இரண்டுக்குற்கு மேற்பட்ட பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் பரவும்போது WHO அதனை Pandemic எனப் பொதுவாக அழைக்கிறது. COVID-19 இப்போது அன்டாட்டிக்கா கண்டம் தவிர்ந்த எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது.
நான் இங்கு என்ன சொல்ல விளைகிறேன் என்றால், பொது மக்களைப் பாதுகாப்பதற்காகவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருக்கவும் WHO இலிருந்து அங்கத்துவ நாடுகளின் சுகாதார அமைப்புகளுக்கான ஒரு ஆக்க பூர்வமான சமிஞ்சை அல்லது எச்சரிக்கை எனவே இவ்வறிவிப்பானது பார்க்கப்பட வேண்டும்.
எனவே இந்த செய்தி நம்மை ஒரு பீதியான சூழ்நிலையில் வைப்பதை விட நம்மைப் பாதுகாப்பதாற்கான வழிமுறையாகும்.சமீப காலத்தில் இதற்கு முன் உலகளாவிய தொற்றுநோயெனக் குறிப்பிடப்பட்டது எது? 2009 இல் H1N1 என்ற வைரஸ் காய்ச்சல் பல நாடுகளில் பரவியபோது சுமார் ஆறு வாரங்களில் இது Pandemic என அறிவிக்கப்பட்டது. இன்றும் இத்தொற்றானது ஒவ்வொரு பருவத்திலும் வந்து வழக்கமான தடிமன் காய்ச்சலின் ஒரு பகுதியாக சத்தமில்லாது மறைந்து செல்கிறது . ஏனெனில் தற்போது H1N1 குணப்படுத்தக்கூடியதாக உள்ளது.
WHO இன் நம்பிக்கைக்குரிய இன்றைய செய்தி என்ன?
COVID-19 ஒரு தொற்றுநோய் என்று பெயரிடப்பட்டுள்ளது, “ஆனால் அதே நேரத்தில், அதைக் கட்டுப்படுத்துவதறரகான மருந்து, vaccine போன்றன விரைவில் கண்டறியப்படும் என நம்புகிறோம்” – என WHO இன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.வழக்கமான பருவகால தடிமன் காய்ச்சல் இறப்பு விகிதம் 0.1% ஆகும். இந்த புதிய கொரோனா வைரஸ் மேற்சொன்ன தரவுடன் ஒப்புடும் போது எவ்வளவு ஆபத்தானது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இடங்களுக்கு இடம் , நாடுகளுக்கு நாடு, நோயாளிக்கு நோயாளி இதன் பரவல், தாக்கம் என்பன மாறுபடும்.ஆனால் COVID-19 ஆனது மற்ற கொரோனா வைரஸ் வகைகளான SARS, (கடுமையான சுவாச நோய்) மற்றும் MERS, (மத்திய கிழக்கு சுவாச நோய்)ஆகியவற்றை விடவும் குறைவான ஆபத்தானது என்று தோன்றுகிறது. ஆனால் இது முந்தைய தொற்றுகளை விட எளிதாக பரவ வல்லது.
பெரும்பாலானவர்களுக்கு இப்புதிய கொரோனா வைரஸானது காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற இலேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. மேலும் பெரும்பாலான நேரங்களில் இரண்டு வாரங்களில் இத்தொற்றானது குணமடைகின்றன. ஒரு சிலருக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சிறார்கள், கற்பினித்தாய்மார்கள் போன்றோருகரகு இது நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய்களை ஏற்படுத்த வல்லது எனத் தரவுகளில் பதிவாகியுள்ளது. COVID -19 ஆல் பாதிக்கப்பட்ட சீனர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளதாக WHO இன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
இதில் கடுமையான நிமோனியா போன்ற தாக்கம் ஏற்பட்டவர்கள் கூட 06 வாரங்களில் குணமடைந்துள்ளதாக WHO இன் 12 மார்ச் 2020 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளி தனிமைப்படு காலம்சந்தேகத்திற்கிடமானோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் நோயின் தொற்றைக் குறைத்துக் கொள்ளலாம், இது நோயின் அறிகுறி காட்டும் (incubation period) காலம் ஆகும். உங்களது பொறுப்புகள் என்ன?முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். 1. தனிப்பட்ட சுகாதாரம்: கை சுகாதாரம், பொருத்தமான சூழ்நிலையில் முகமூடியைப் பயன்படுத்துதல் மற்றும் அதை அகற்றுவது, தும்மும்போது மற்றும் இருமும்போது திசுக்கள் அல்லது கைக்குட்டைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் அவற்றை ஒழுங்கான முறையில் பாவித்தபின் பராமரியுங்கள். 2. கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும். 3. போதுமானளவு திரவப்பானங்கள் , நீர் அருந்துதல். 4. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும்: சரியான நேர உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் ஒழுங்கான தூக்கம் என்பன. 5. உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், இருமல், தொண்டை வலி அல்லது உடல் வலி இருந்தால் விரைவில் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். 6. பலவீனமான செய்திகளை சமூக வலைத்தளங்களூடாக பரப்ப வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுள்ளதுடன், பீதி அடையவும் வேண்டாம், என்றும் ஆனால் தற்காப்பு செயலில் தொடராக இருக்குமாறும் விசேட குடும்பசல வைத்தியர் முஹம்மத் அப்துல்லாஹ் முஹம்மத் ஜெஸீம் இந்த கட்டுரையின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.தொகுப்பு-