பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பாக இறக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக அறிக்கை தேவை

உயிரிழக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளை அடக்கம் செய்யாமை சம்பந்தமாகவும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் விடயங்களை கேட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களை ஏற்றுக்கொண்டு, கொரோனா நோயில் இறக்கும் முஸ்லிம் சமூகத்தினரை அடக்கம் செய்யும் உரிமையை மதிக்குமாறும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆத்திரமூட்டும் பிரசாரங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், இது இலங்கை கொண்டுள்ள சர்வதேச பொறுப்பு எனவும் கூறி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் அதன் சமய உரிமைகள் தொடர்பான பிரதிநிதி கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.


கொரோனா வைரஸ் நோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பினால், விசேட நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய வழங்கியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கூறியுள்ளார்.


கொரோனாவில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சு வெளியிடடுள்ள வழிக்காட்டுதல்களை திருத்துமாறும் அப்படி திருத்த முடியாவிட்டால் அதற்கான காரணத்தை தெளிவுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் வெளியிடப்படுவதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு தெளிவுப்படுத்துமாறு கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும். மாகாணசபை நடாத்தவேண்டும்

wpengine

பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதியை ஏற்பதில்லை! சாய்ந்தமருதில் தீர்மானம்

wpengine

21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா

wpengine