Breaking
Wed. Apr 24th, 2024

பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்  வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிகின்றது.

குறிப்பாக இன்று(27) அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பொலிஸ்   பிரிவில் உள்ள  இப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதி உள்வீதி ஏனைய   பகுதிகளில் உள்ள   உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி தத்தமது வாகனங்களில் வழமை போன்று நடமாடி வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் மீனவர்கள் என்ற போர்வையில் சுகாதார நடைமுறைகளை மீறி கூட்டம் கூட்டமாக குழுமி மக்கள் தத்தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுவதுடன்  பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபடுகின்றனர்.

அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த விடயங்களில் ஈடுபடாது வீடுகளில் முடங்கி இருக்குமாறு  அடிக்கடி ஒலிபெருக்கி வாயிலாக சுகாதார தரப்பினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு பயணத்தடைகளை மிறி செயற்படுவதை காண முடிகின்றது.கடந்த 21 ஆந் திகதி 11 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை  4 மணிவரை பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு பயணத்தடையை மீறும் செயற்பாடு தொடர்கின்றது.

நாட்டின் சகல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்ற கொரொனாவின் 3 ஆவது அலையை தவிர்பப்து நாட்டின் உள்ள சகல பிரஜைகளின் கடமையல்லவா என்பதை எமது ஊடகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *