Breaking
Mon. Nov 25th, 2024

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆன ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார்.

கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை பொதி செய்யும் உறைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சருடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தொழிற்சாலையின் செயற்பாடுகளை நன்கு விருத்தி செய்தால் பல இளைஞர்களுக்கு தொழில் வழங்க முடியுமென தெரிவித்த அவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உதவிகளையும் தமது நிறுவனம் வேண்டி நிற்பதாக கூறினார்.

இந்தத் துறையில் ஈடுபாடு காட்டும் இலங்கை இளைஞர்களை கொரியாவுக்கு அனுப்பி தொழில்நுட்ப அறிவுகளை வழங்கி பயிற்றுவிக்கும் திட்டம் தமது நிறுவனத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரிய நிறுவனத்தின் முயற்சியை பாராட்டிய அமைச்சர், தமது அமைச்சு இவ்வாறான நல்ல பல திட்டங்களுக்கு என்றுமே உதவுமென உறுதியளித்தார்.d8a07f39-0ff4-4273-bd14-cf2437f259ee

இந்த சந்திப்பில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.டி.எஸ்.பி பெரேரா, அமைச்சின் கைத்தொழில் ஆலோசகர் திரு ரோய், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம் எம் ஜுனைதீன், பொறியியலாளர் முஸ்தபா பாவா, ஏ.ஆர்.எம் அஸீம் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *