செய்திகள்பிரதான செய்திகள்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் காயம் !

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரணில்,மைத்திரி அரசுக்கு சவால் மஹிந்த

wpengine

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

wpengine

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

wpengine