Breaking
Mon. Nov 25th, 2024

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது.

அந்தவகையில்,வவுனியா மாவட்ட காணாமல் போனோரின் உறவினர்களால்  வவுனியா-பன்றிகொய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து ஒமந்தை இராணுவச்சாவடி வரையில் இப் பேரணி சென்றது.

இப் பேரணியில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

‘காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகமா? கண் துடைப்பு அலுவலகமா?,OMPயும் வேண்டாம் உறவுகளை ஒளிச்சு வைக்கவும் வேண்டாம்,கால நீடிப்பு கடைசிவரைவேண்டாம்,அலியாவுக்கு பின்னாலே கம்பெரலியாவிற்கு முன்னாலே,காட்டி கொடுப்பதற்கு சன்மானமாகம்பெரலியா,ஒற்றையாட்சிக்குள் தீர்வு ஒருபோதும் கிடைக்காது,கொடுக்காதே கொடுக்காதே அரசுக்கு ஆதரவு கொடுக்காதே,முண்டு கொடுக்காதே தமிழரை முட்டாள் ஆக்காதே,காணாமல் ஆக்கப்பட்டவர்களை கம்பெரலியாவிற்கு விற்காதே,சர்வதேச சமூகமே தமிழர்களை ஏமாற்றாதே,மனித உரிமைகள் இங்கே மதிக்கப்படுவதில்லை,கால அவகாசம் கொடுத்து கண்டது என்ன?,சர்வதேசமே கால நீடிப்பு வேண்டாம்,மக்கள் பிரதிநிதிகளே கால நீடிப்புக்கு கை கொடுக்க வேண்டாம்,எங்களின் வாக்கு தமிழ் மக்களை ஏமாற்றவா?இஎங்கள் உறவுகள் எங்கே உன்மை சொல்ல ஒருவரும் இல்லையா?,கையில் கொடுத்தோம் தெருவில் நிற்கின்றோம்,யாரை காப்பாற்ற நிபந்தனையற்ற ஆதரவு’

உள்ளிட்ட பல்வேறு  வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் இவ் போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *