பிரதான செய்திகள்

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி அழுது,தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர். நமக்கு அந்த பாக்கியம் இன்றைய நாளில் கிடைக்காவிடினும் இப்ராஹிம் நபி, அவரது அருமை மகன் இஸ்மாயில் நபியின் தியாக உணர்வுகளை நினைத்துக் கண்ணீர் மல்கி நிற்கின்றோம்.

இன்றைய நன்நாளில் நமது சமுதாயம் படுகின்ற வேதனைகள் நீங்கி, நிம்மதியான வாழ்வு அவர்களுக்குக் கிட்டவேண்டுமென அல்லாஹ்வை பிரார்த்திப்போம். அந்நிய சமூகத்துடன் அன்பாக நடந்து அவர்களுடன் நல்லுறவைப் பேணுவோம். ஒருவருக்கொருவர் உதவி செய்து இஸ்லாமிய வழிமுறைகளை நன்முறையாகக் கடைப்பிடித்து வாழ இன்றைய திருநாளில் உறுதி பூணுவோம்.

இன்னும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சகோதரர்கள் விரைவில் தமது சொந்த இடம் திரும்பி, இயல்பான வாழ்வினைத் திரும்பப்பெற இந்நன்நாள் உதவ வேண்டும். நமக்கிடையே இருக்கும் சகல விதமான காழ்ப்புணர்வுகளையும் நீக்கி, அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து முஸ்லிம்கள் என்ற ரீதியில் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், சந்தோசமகவும் வாழ்வதற்கு இந்த திருநாள் வழிவகுக்க வேண்டுமென இறைவனை பிரார்திப்போம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுதுள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.14344761_1412584415424416_5844989184740669196_n

Related posts

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

wpengine

ரஞ்சன் செய்த ஒரே! ஒரு மோசடி தனது வழுகை தலையை மறைத்து

wpengine

கல்வி தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் உடன்படிக்கை

wpengine