கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் மன்னார்-மரிச்சிகட்டியினை பிறப்பிடமாக கொண்டவர் ஒருவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் உள்ள இரு நிறுவனங்களில் நிறைவேற்று பணிப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் இதற்கான நியமன கடிதங்களை நேற்று அமைச்சில் வழங்கிவைத்தார். கண்டி மகியாவ ஆய்சி இண்டர்நெஷனல் பிரைவேட் லிமிடட் உரிமையாளரும் பிரபல சமூக சேவகருமான அல் ஹாஜ் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்கள் லக்சல நிறுவனத்தின் நிறைவேற்று பனிப்பாளராக அமைச்சரினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கண்டி பாததும்பரை முஸ்லீம் காங்கிரஸ் முன்னாள் அமைப்பாளரும் ,அகில இலங்கை வை எம் எம் மே அமைப்பின் தேசிய பொருளாலருமான மடவளை பஸார் அல் ஹாஜ் றிஸ்மி தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இலங்கை சீனி கூட்டுத்தாபன அமைச்சரின் இணைப்பாளர் அல் ஹாஜ் நபீல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் மற்றும் முஹாஜிரின் அரபு கல்லுாரியின் தலைவர் அல் ஹாஜ் அஷ்ரப் முபாறக் ரஷாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.