பிரதான செய்திகள்

கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டம்-சந்திரிக்கா

(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களைத் தவிசாளராகக் கொண்டுசெயற்படுகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் (ONUR) வடக்கு> கிழக்கு ஆகியஇரு மாகாணங்களிலும் உள்ள 08 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்களினது ஒத்துழைப்புடன்மேற்கொள்ளப்பட்ட பரந்த கணிப்பீடுகளின் பின்பு கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக்கருத்திட்டம் (EBVDP) ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சரான அதிமேதகு சனாதிபதியினால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்டஅமைச்சரவை விஞ்ஞாபனம் அமைச்சரவையினால் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இக் கைத்தொழிலைஅடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டமானது (EBVDP) மார்ச் மாத இறுதியில் முன்னெடுக்கப்படஉத்தேசிக்கப்பட்டுள்ளது.

யுத்த மோதல்களினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இக்கருத்திட்டத்தினூடு தொழில்முயலுநர் நிலையை அடிப்படையாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத் திட்டத்தின்மூலம்இப் பிரதேசங்களில் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படாமலிருக்கும் சமூகபொருளாதார அபிவிருத்திக்குவழிகோலுவதே இதன் நோக்கமாகும்.

இதனடிப்படையில் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டத்தினூடு(EBVDP) விஷேடமாக குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளராக உள்ள பெண்கள்விதவைகள் மற்றும்வேலையில்லாமல் ஒடுக்கப்பட்டுள்ள இளைய சமூகத்தினர் ஆகியோருக்கு தொழில்முயலுநர் நிலையைஅடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிவகை அமைத்துக்கொடுக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கலில் உள்ள 113 கிராமங்கள் பூராகவும் முன்னெடுக்கப்படும் ரூபாமில்லியன் 446பெறுமதியான (EBVDPஇக் கருத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதொழில்முயலுநர்கள் 1785 பேருக்கு தங்களது வருமான நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பாக கடன்மற்றும் கொடை ஆகிய இரு வழிகளில் இந் நிதி வழங்கப்படுகின்றது.

அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளினூடாக வழங்கப்படும் இக் கடன் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு ரூபா 250,000 உச்சஎல்லை வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். சகல வாணிபத் திட்டங்களுக்காக வழங்கப்படும் மொத்தக் கடன்தொகையின் 25%  தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR)  கொடையாக தாங்கிக்கொள்ளப்படுவதோடு கடனுக்கான மொத்த வட்டித் தொகையையும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் செலுத்தப்படும்.

Related posts

மட்டு,மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் -அமீர் அலி

wpengine

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

wpengine

மாவில்லு வர்த்தகமானி அறிவித்தல்! தகவல் பெறாத ஆணைக்குழு

wpengine