ஊடகவியளாளர்கள் :-
இராணுவ தளபதி லுத்திரன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக அவர்களிடம், அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்த ஒருவரை விடுவிக்கக்கோரி அழுத்தம்கொடுத்தாரா என கோருகின்றனர்.
இராணுவத்தளபதி :- அழுத்தம்கொடுத்தார் என்பதை விடுத்து இராணுவத்தளபதி என்ற வகையில் வேண்டுகோள் முன்வைத்தார். சமூகத்தில் பொறுப்புவாய்ந்த ஒருவர் என்ற அடிப்படையில் கைது செய்த ஒரு நபர் தொடர்பில் அறிய அவருக்கு உரிமை உண்டு. அதில் எந்தப் பிழையும் இல்லை.
இரண்டு பதில்களை நான் அவருக்கு வழங்கினேன்.
முதலாவது முறை கேட்டபோது தேடிப்பார்த்து சொல்வதாகக் கூறினேன்.
இரண்டாவது முறை தேடிப்பார்த்து இருக்கவில்லை.
மூன்றாவது முறை அவ்வாறு ஒருவர் இருக்கின்றார் ஒன்றரை வருடங்களும் பிற்பாடு கேளுங்கள் என்றேன்.
ஊடகவியளாளர்கள்:-
வேண்டுகோள் ஒன்றை விடுத்ததாக கூறினீர்கள் அந்த வேண்டுகோள் யாது?
இராணுவத்தளபதி :- தகப்பன் பிள்ளையை பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே.
றிசாட் பதியுதீனிடம் ஊடகம்:-
இராணுவத்தளபதியிடம் எது சம்மந்தமாக பேசினீர்கள்?
றிசாட் பதியுதீன் :- இராணுவத்தளபதி சொன்னது போலவே பேசினேன். தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் ஆலோசகர் முகைதீன் அழைப்பை ஏற்படுத்தி அவரின் மகனை இனம் தெரியாத நபர்கள் கூட்டிச்சென்றதாகவும், பொலிஸில் தேடிய போது தெகிவளை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் இராணுவம் கைது செய்ததா என என்னிடம் ஆராய்ந்து கூறுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
நான் இராணுவ தளபதியிடம் கேட்டேன். அது அல்லாமல் வேறு ஏதும் கேட்கவும் இல்லை. பேசவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவும் இல்லை. கொடுக்கப்போவதும் இல்லை.
நானும் ஒரு பிள்ளையின் தகப்பன் என்ற முறையில் ஒரு பிள்ளையை தொலைத்த தந்தையின் முறைப்பாட்டை இராணுவத்தளபதியிடம் கேட்பது பிழையா?
வெளிநாட்டு ஊடகவியளாளர் முன் தந்தை முகைதீனின் வாக்குமூலம்;-
இங்கு பதினைந்து அல்லது அதற்கு உட்பட்டவர்கள் வந்திருந்தார்கள். கண்கள் மாத்திரம் தெரியும் வண்ணம் அவர்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. முற்றிலுமாக சூழ்ந்து நின்றிருந்தார்கள். நான்கு அல்லது ஐந்து பேர் எனது மூத்தமகனை இழுத்துச்சென்றார்கள். அவர் நாசகாரசெயலுடன் தொடர்புபட்டிருந்தால் கட்டாயம் தண்டிக்கபட வேண்டும். ஆனால் அவரை யார் கூட்டிச் சென்றிருந்தார்கள் என்பதனை நான் அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அமைச்சரிடம் ஊடகம் :-
ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா?
அமைச்சர் :- முப்படையும் பொலிஸாரும் சேர்ந்து ISIS இனை இல்லாது ஒழிக்க மகத்தான சேவையை வழங்கி வருவதனை இட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன். இதை வைத்து அரசியல் லாபம் அடைய சில நபர்கள் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். இனவாதம் சீண்டி நாட்டை அழிவுக்கு கொண்டு செல்ல வேண்டாம். எல்லாவற்றையும் விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.
ஷிபான் BM
மருதமுனை.