செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

கைதான 8 இந்திய மீனவர்களும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று ஞாயிற்றுக்கிழமை (29) ஞாயிறு அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வர 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

சொத்து அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது சட்ட நடவடிக்கை..!

Maash

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

wpengine

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine