பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கே.கே.மஸ்தானின் வாகனம் சற்று முன்னர் விபத்து! சாரதிக்கு சிறு காயம்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் பயணிக்கவில்லை என்பதுடன் அவரது சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வாகனத்தின் சக்கரத்தில் காற்று வெளியாகிய காரணத்தினால் எதிர்த் திசையில் வந்த இராணுவ கேப் ஒன்றுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.!

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

wpengine

பால்மா விலை அதிகரிப்பினால், பால் தேநீரின் விலையும் அதிகரிப்பு..!

Maash