பிரதான செய்திகள்

கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது

புத்தளம் நகர சபையின் தலைவர்  ​கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தொன்றில் நேற்று (23) மரணமடைந்த நிலையில், அவரது சாரதி உள்ளிட்ட மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள்  மதுபோதையில் இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் புத்தளம் மற்றும் வனாத்தவில்லு  பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லைக்கு எதிர்ப்பு! அமைச்சர் றிஷாட்டிக்கு ஆதரவு

wpengine

சமூக ஊடகங்கள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர்

wpengine

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு

Maash