பிரதான செய்திகள்

கேப்பாபுலவு மக்களை ஏமாற்றும் தமிழ் கூட்டமைப்பு! மக்கள் விசனம்

அரசாங்கத்தையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க முயற்சிக்கும் எமது அரசியல்வாதிகள் எமது உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது ஏன் என்று கேப்பாபுலவு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபிலவில் படையினர் வசம் இருக்கின்ற தமது காணிகளை மீட்டுத் தருவதற்கு அரசியல் தலைமைகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை குறித்து காணிகளை இழந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று தமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி கேப்பாபிலவு இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் உறுப்பினர்கள், அரசியல்வாதிகளும் தமது போராட்டத்தை பலமான ஆதரவை வழங்குமாறு கோரி இருந்தனர்.

இந்தநிலையில் போராட்டத்துக்கு தமது மாவட்டத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் ஒத்துழைப்புக்களை வழங்க வில்லை என்றும் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசியல்வாதிகள் குற்றவாளிகளையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கின்ற செயற்பாடுகளுக்கு பொலிஸ் நிலையம் நீதிமன்றங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால் எங்களுடைய போராட்டத்துக்கு 15 நிமிடத்தைக் கூட அவர்களால் செலவிட முடியாமல் போயிருக்கிறது.

இதேவேளை, யுத்தகாலத்தில் உறவுகளையும் உடன்பிறப்புகளையும் இழந்த நாங்கள் இன்று எஞ்சி இருக்கின்ற நிலத்திற்காகவும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் எமது வாக்குகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் எங்கள் நலனில் அக்கறை கொள்ளாது குற்றவாளிகளை பாதுகாப்பதில் அவர்களை குற்றத்திலிருந்து தப்ப வைப்பதற்கும் முயற்சித்து வருகின்றமை தமக்கு வேதனை அளிப்பதாகவும் கேப்பாபிலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

wpengine

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த

wpengine

மன்சூரின் காடைத்தனம் இனியும் செல்லாது.

wpengine