பிரதான செய்திகள்

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்! இரவுணவையும் வழங்கினர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கினர்.

 

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 20 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை விமானப்படைத்தளத்துக்கு முன்னால் வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு  உள்நாட்டிலும்  சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

 

அகில இலங்கை  ஜம் இய்யத்துல் உலமா சபை முல்லைத்தீவு கிளையினரும் முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, தண்ணீர்ஊற்று, ஹிஜிராபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் பரிபாலனசபையினரும் நேற்று மாலை கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு நேரடியாக வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டதோடு இரவு உணவினையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாமதமாகும் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம்!

Editor

துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் (படம்)

wpengine

றிஷாட்டை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்க்க ஜனாதிபதி ஆசைபட்டால்! அவரும் அதே வரிசையில் அமர நேரிடும்.

wpengine