அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டவர்கள், கொழும்பில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாடகை வீடுகளில்.

கொழும்பு நகரில் 20ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக வீட்டுத்திட்டங்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டபோதும் அந்த வீடுகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணம் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத கட்டணம் என்பதால் தொடர்ந்தும் அந்த மக்கள் வாடகை வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். அதனால் நிர்மாணிக்கப்படும் வீடுகளை நியாயமான விலைக்கு கொடுப்பதன் மூலமே கொழும்புவாழ் மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டு கொழும்பு நகரில் 20ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1994க்கு பின்னர் கொழும்பு நகரில் வீடுகள் அமைக்கப்படவி்ல்லை. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டளவு வீடுகள் அமைக்கப்பட்டன.

ஆனால் அந்த வீடுகள், கொழும்பு வாழ் மக்கள் வாழ்ந்துவந்த பெருமதிவாய்ந்த காணிகளை பெற்று்கொள்ள கோட்டபாய ராஜபக்ஷநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக  இருந்த காலத்தில் மேற்கொண்டதாகும். அவ்வாறு இல்லாமல் இந்த 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படவில்லை. அதேநேரம் கொழும்பில் மீள் ழுடியேற்றத்துக்கே வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோட்டாய ராஜபக்க்ஷ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதனை தொழில் வல்லுனர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 7.8 மில்லியன் ரூபாவுக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டன.ஆனால் தற்போது அந்த தொழில் வல்லுனர்கள் யாரும் அந்த வீடுகளில் இல்லை.

அவர்கள் வாடகைக்கு அந்த வீடுகளை வழங்கியுள்ளனர். கொழும்பு நகரில் வீடற்ற பலர் மாதாந்த அடிப்படையில் குறிப்பிட்டதொரு தொகையை வழங்கி வீடுகளை கொள்வனவு செய்ய பலர் இருந்தனர். அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கவில்லை. தற்போது பொரளை பகுதியிலும் அதேபோன்றதொரு வீட்டு திட்டம் ஒன்று இருக்கிறது. அந்த வீடுகளும் சுமார் 9 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் போன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையும்  கொழும்பில் வீடுகளை அமைத்து வீடு உள்ளவர்களுக்கே மீண்டும் வழங்கும் வேலையையே செய்து வருகிறது.

அவ்வாறு செய்து கொழும்பில் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. வாடகை வீ்டுகளில் இருப்பவர்களுக்கு என கொழும்பு புளுமெண்டல் பகுதியில் 450 சதுர அடிகள் கொண்ட வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஒரு வீட்டுக்கு 10 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 10மில்லியன் ரூபா கொடுத்த வீடு பெற்றுக்கொள்ள முடியுமானவர்கள் அங்கு யாரும் இல்லை. அதனால் இந்த வீடுகளையும் வீடு இருப்பவர்களே பெற்றுக்கொள்வார்கள்.

ஒருகொட வத்தையிலும் 1100 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வீடுகளும் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு என்றே தெரிவிக்கப்படுகிறது. அது வீடற்றவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை அதனை வழங்கும்போதுதான் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நகர அபிவிருத்தி சபை அந்த வீடுகளையும் பெற்றுக்கொண்டு வியாபாரம் செய்யும் நடவடிக்கையே இடம்பெறும்.

அதனால் கொழும்பில் வாடகை வீடுகளில் இருப்பவர்களில் 60 வீதமானவர்கள் அன்றாட கூலி தொழில் செய்பவர்கள். அதனால் அவர்களின் வருமானத்துக்கு ஏற்றவகையில் அந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே கொழும்பு வாழ் மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றார்.  

Related posts

மஹிந்தவின் பேரணியில் ஒலிக்கும் விமலின் குரல்

wpengine

அரிப்பு கிராமத்தில் கடற்படை சிப்பாய் தாக்குதல்! 56 பேர் கைது

wpengine

தேர்தல்களை நடத்த முடியாது! பிரதமர், சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள்

wpengine