அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில் விடுதலை !

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இன்று வியாழக்கிழமை (19) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று புதன்கிழமை (18) சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியதால், நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

wpengine

துருக்கி எர்டோகனின் அதிரடி நடவடிக்கை

wpengine

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது- அமைச்சர் றிசாத்

wpengine