பிரதான செய்திகள்

கூட்டமைப்பு பிரிவினை வாதக்கருத்துக்களை விதைகின்றார்! கட்சிக்கு தடை தேவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தொடர்ச்சியாகப் பிரிவினை வாதக்கருத்துக்களை சமூகத்தில் விதைப்பார்களாயின் கூட்டமைப்பை குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது தடை செய்து அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புனர் வாழ்வளிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


அன்று பண்டாரநாயக்க, சமஷ்டி கட்சியை குறுகிய காலப்பகுதிக்குத் தடை செய்தார்.எனவே, போர் முடிவடைந்த கையோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கிளையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தடை விதித்திருக்க வேண்டும்.


அவ்வாறு செய்யாமல் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததால் தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அரசியல் ரீதியில் வலுப்பெற்றனர். அன்றே முடக்கியிருந்தால் இன்று தலைதூக்கி பிரிவினை வாதத்தைக் கக்கும் நிலை உருவாகியிருக்காது.
எனவே,குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து அந்தக் கட்சியின் சகல உறுப்பினர்களுக்கு புனர் வாழ்வளிக்க வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மை. அதை வரவேற்கின்றோம். ஆனால், ஜனாதிபதி கனவில் சரத்பொன்சேகா கூட்டமைப்புக்கு வக்காளத்து வாங்குவதைக் கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

றிஷாட்,ஹக்கீம் ஆகியோரின் புரிந்துணர்வில் புத்தளத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி

wpengine

சட்டவிரோத மணல் குவிப்பு! முல்லைத்தீவு அருட்தந்தை கைது

wpengine