பிரதான செய்திகள்

கூட்டமைப்புக்குள் தொடர் குழப்பங்கள்

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையில், இன்னுமும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில் ரெலோ தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் புளொட் அதிருப்தியடைந்துள்ள போதிலும், அது குறித்து தொடர்ந்தும் மௌனமாகவே இருந்து வருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் வடமாகாண சபை அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையினை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறன.

Related posts

றிஷாட் அதைச்செய்ய முடியும். எனவே நான் சொல்வதைச் செய்யுங்கள் மஹிந்த

wpengine

மீண்டும் குரங்காட்டம் ஆடத்தொடங்கியுள்ளான் மின்னல் ரங்கா.

wpengine

முல்லைத்தீவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள கடும் முயற்சி அமைச்சர் றிஷாட்

wpengine