பிரதான செய்திகள்

கூட்­ட­மைப்பை சின்­னா­பின்­ன­மாக்­கி­ய­வ­ராக சம்பந்தன் -சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பை­விட்டு வெளி­யே­று­வது தொடர்பில் நாம் சரி­யான நேரத்தில் சரி­யான காலத்தில் முடி­வெ­டுப்போம். மேலும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இவ்­வா­றான பாதை­யி­லேயே பய­ணிக்­கு­மாயின் அக் கட்­சியை சின்­னா­பின்­ன­மாக்­கி­யதன் மூல கர்த்­தா­வாக சம்­பந்­தனே காணப்­ப­டுவார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­பி­ரே­ம­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து அதனை பிழை­யாக வழி­ந­டத்­து­கின்­ற­வர்கள் வெளி­யேற வேண்­டுமா அல்­லது அதில் அங்கம் வகிக்கக் கூடிய ஏனைய கட்­சிகள் வெளி­யேற வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ள­தாக அவர்  மேலும் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனால் நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத்தில் நடத்­தப்­பட்ட  பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை வைத்­துள்ள குறிக்­கோ­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்ற தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கையை ஏற்று அதில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்­சிகள் வெளி­யேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குறிப்­பிட்­டுள்­ளமை தொடர்­பாக  ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர்.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்  தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்,

தமிழ் மக்கள் பேர­வை­யென்­பது அர­சியல் கட்­சி­யல்ல என்றும் அது அழுத்தம் கொடுக்­கின்ற ஓர் குழு­வா­கவே எப்­போதும் செயற்­படும் என்றும் அதன் இணைத் தலை­வர்­களால் தொடர்ச்­சி­யாக கூறப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இவ் அழுத்த குழு­வி­னூ­டாக மக்கள் பிர­தி­நி­திகள் மக்கள் நலன் சார்ந்து எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் இக் குழு அழுத்­தத்தை மேற்­கொண்டு வரு­கின்­றது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­பதுஇ ஓர் அர­சியல் கட்சி. இது மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலை­வர்­களை கொண்ட ஓர் கட்சி. எனினும் இக் கட்­சியில் பல தவ­றுகள் உள்­ள­தென்­பது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றாகும். இத்­த­கைய தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் உள்ளே இருக்­கின்ற தவ­று­களை அல்­லது அக் கட்­சியின் தலை­மை­யா­னது தொடர்ச்­சி­யாக விட்­டு­வ­ரு­கின்ற தவ­றுகள் தொடர்­பாக நாம் தொடர்ச்­சி­யா­க சுட்­டிக்­காட்­டியே வரு­கின்றோம்.

உதா­ர­ண­மாக கேப்­பா­ப்பு­ல­விலே மக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நில மீட்பு போராட்­டத்தின் மக்­களை கொழும்­புக்கு வாருங்கள் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ளலாம் என மக்கள் பிர­தி­நி­திகள் கூறு­வதை நாம் கண்­டித்­துள்ளோம். மக்கள் பிர­தி­நி­திகள், தமிழ் மக்­க­ளது வாக்­கு­களை பெற்ற தமிழ் பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை கொழும்­புக்கு அழைத்து பேசு­வதோ, அங்கே வைத்து அவர்­களை குழப்­பு­வதோ, அதனை நிறுத்­து­வதோ, தவறு என்று சுட்­டிக்­காட்­டி­வ­ரு­கின்றோம். இ தமிழ் மக்­க­ளது பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்ற மக்­க­ளோடு அவர்­க­ளது பக்­க­மி­ருந்து போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்கி மக்­க­ளது கோரிக்­கை­களை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களை நாம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்டி வரு­கின்றோம்.

அது மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்கள் மத்­தியில் ஓர் அபிப்­பி­ராயம் உள்­ளது.  தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்­பது ஒற்­று­மை­யாக இருந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு  உள்­ளது. அந்த அபிப்­பி­ரா­யத்தின் பிர­கா­ரமும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016 ஆண்­டுக்குள் தீர்­வினை பெற்றுத் தரு­வ­தாக கூறி அதற்­கான கால அவ­கா­சத்தை கோரி­யி­ருந்தார். நாமும் அதற்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தோம். ஆனால், இன்­றைய தினம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் மாத்­தி­ர­மல்ல ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுமே ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்றனர். அத்­துடன் இது­வரை காலமும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற தமி­ழ­ரசு கட்­சி­யினர் தாம் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­ப­டு­கின்றோம் வெளி­நா­டு­க­ளுடன் பேசு­கின்றோம், அவ்­வா­றாக விட­யங்­களை கையாள்­கின்றோம் எனக் கூறிய நிலையில் இன்று அவை எல்லாம் ஏமாற்­றுப்­பட்டு விட்­ட­னவா  அல்­லது தோல்­வி­ய­டைந்து விட்­ட­னவா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­ப­திலும் அதன் உரு­வாக்கம் என்­ப­திலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பங்­குள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேற வேண்­டி­ய­வர்கள் யார் என்ற கேள்­வியும் எழுந்துள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிழையாக வழிநடத்துகின்றவர்கள் வெளியே போக வேண்டுமா அல்லது அக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற எனையோர் வெளியேற வேண்டுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இவ்வாறான பாதையிலேயே பயணிக்குமாயின் அக் கட்சியை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார். மேலும் இக் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் அதற்கான முடிவை எடுப்போம் என்றார்

Related posts

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

wpengine

அப்பாவி மீனவர்களின் சொத்துகளையும்,பணங்களையும் கொள்ளையடித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

வவுனியாவில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

wpengine