பிரதான செய்திகள்

குவைத் அரசு நிதி மூலம்! 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை அமைச்சர் ஜோன்ஸ்டன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின்கீழ் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டின் ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த 66 பாலங்களை புனரமைக்கும் திட்டத்திற்கு குவைத் அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த 66 பாலங்களும் புனரமைக்கப்பட்டு 03 வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பழைய பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டுவதும், குறுகலான பாலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பாலங்களை பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டால் நாடு பூராகவும் உள்ள வீதி வலையமைப்பிற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார். தேவையான பாலங்களின் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் காட்டுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்கள் தினம் இன்று ஹிஸ்புல்லாஹ்

wpengine

பேஸ்புக்கில் கணவனை வியாபாரம் செய்த மனைவி

wpengine