உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குழந்தையை கொலை செய்து விட்டு கணவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய மனைவி

இந்தியாவில் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு கணவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நவீதா மீனா. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நவீதாவுக்கும், ராஜேஷுக்கும் சில காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து பெற முடிவு செய்து சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.

இருவருக்கும் இறுதியாக பொலிசார் கவுன்சிலிங் சில தினங்களுக்கு முன்னர் கொடுத்த போது ராஜேஷ் தன்னிடம் மன்னிப்பு கேட்பார் என நவீதா நினைத்த நிலையில் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து விரக்தியின் உச்சத்தில் இருந்த நவீதா தன்னுடன் வசித்த இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து நேற்றிரவு தனது 3 வயது இளைய மகன் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த நவீதா, பின்னர் மூத்த மகனை அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றார்.

மாடியிலிருந்து மகனுடன் சேர்ந்து குதிக்க திட்டமிட்ட நவீதா அதற்கு முன்னர் கணவருக்கு வாட்ஸ் அப்பில், உன் வாழ்க்கையில் மிக பெரிய துயரத்தை சந்திக்க தயாராக இரு என மெசேஜ் அனுப்பினார்.

ஆனால் தற்கொலை செய்ய மனமில்லாமல் மகனுடன் வீட்டுக்குள் வந்த நவீதா சடலமாக கிடந்த இளைய மகனை தூக்கி கொண்டு சுடுகாட்டுக்கு ஓடினார், இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நவீதாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடந்த விடயங்களை அனைத்தையும் வாக்குமூலம் அளித்தார் நவீதா.
இதையடுத்து ராஜேஷால் தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது என அவர் எழுதியிருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.

வாட்ஸ் அப்பில் கணவருக்கு அனுப்பிய மெசேஜை முதலில் நவீதா அழித்த நிலையில் அந்த ஸ்கீரின் ஷாட் ராஜேஷ் செல்போனில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

Editor

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெற முடியாது

wpengine

பல பிரபலமிக்க உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட தீனுல் ஹஸன் மௌலவியின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யவும்.

wpengine