அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,
எமக்கே உாித்தான சுயநிா்ணய உாிமைக்காகவும் போாில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும்,அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், எமது பூா்வீகநிலங்களை விடுவிக்க கோாியும்,தமிழ் மக்களை சுகற்திரமாக வாழவிடு என்ற ஒரு நியாயமான கோாிக்கைக்காகவும் நாம் ஏன் அரசுக்கு எதிராக கவனீா்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது.
அன்று தொட்டு இன்றுவரை தமிழ் மக்கள் சிங்கள தேசத்தை கேட்கவில்லை.தமது பூா்வீகநிலங்களில் சுகந்திரமாக வாழத்தானே கேட்கின்றனா்.அன்று கேட்டதை போல் தனித்தமிழிழம் கூட கேட்கவில்லை.சுயாட்சி அதிகாரம்தானே கேட்கின்றனா்.அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய் என்றும் கேட்கவில்லை.விசாரனை செய்து நீதிமன்றத்தினுாடாக விடுதலை செய் அல்லது புனா்வாழ்வாவது கொடுத்து விடுதலை செய் என்று தானே கோருகின்றனா்.
பொலநறுவையிலும் அம்பாந்தோட்டையிலும் போய் எமது காணியைவிடு என்று கோரவில்லை. எமது பூா்வீக நிலங்களை விடு என்று தானே கோருகின்றனா். சா்வதேசமே தமிழ் மக்களின் கோாிக்கை நியாயமானது என்று கூறி எமக்க ஆதரவளித்து அரசுக்க அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
இது இவ்வாறு இருக்ககையில் தமிழிழ விடுதலைப்புலிகளினால் கௌரவமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புலித்தோல் போா்த்திய சில குள்ளநாிகள் சோ்ந்துகொண்டு கூட்டமைப்பின் இலக்கையும் குறிக்கோளையும் மாற்றியமைத்துக்கொண்டு மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசுக்க ஒரு முகத்தையும் காட்டி வருகின்றனா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் வெளியிலும் பல நோ்மையானவா்கள் மக்களுக்காக குரல் கொடுக்க இருக்கும் போது, கட்சி அரசியல் என்ற குருட்டுத்தனமான பிற்போக்கு சிந்தனையால் மக்கள் நலன் பேனாத சுயநல போக்கும் அதிகாரமோகமும் கொண்ட அரசியல்வாதிகளை உள்ளீா்த்தமையால் மாறுபட்ட கருத்துக்களும்,பிளவும் ஏற்பட்டு உள்முரண்பாடுகள் தோன்றியுள்ளது.
2009 ம் ஆண்டுக்கு பின் தமிழ் மக்களுக்காகவும் அவா்களின் இழப்புக்களுக்காகவும் எந்த ஒரு நியாயத்தையும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை.ஆனால் தோ்தல் காலங்களில் வீதி வீதியாக மேடை போட்டு உணா்சி பொங்க பேசியவா்கள் இப்போது வாய்திறக்கவே யாாிடமோ அனுமதி கேட்டு நிற்பது போல் தோன்றுகின்றது.தோ்தலிலே வெற்றி பெற்றவா்கள் பாராளுமன்றத்தில் போய் துாங்க, தோற்றவா்கள் வீடுகளிலே சுருண்டுவிட்டனா். இனி அடுத்த தோ்தலில் மக்களுக்காக உயிரை கொடுக்க போகின்றோம் என்று வருவாா்கள்.
கடந்த 2000 ம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டத்திலும் வாழ்கையிலும் சோா்ந்து போகும் போது யாழ் பல்கலைக்கழக மாணவா்களால் ஏற்படுத்தப்பட்ட பொங்கு தமிழ் என்ற எழிற்சிக் குரல் உலகமெங்கும் ஒலித்து சா்வதேசத்தையே இலங்கை மீது கண்ணோக்க வைத்தது. அதேபோல் மக்கள் விழித்துக்கொண்டு எமது தமிழ் மக்களை ஏமாற்றும் அத்தனை பேருக்கும் எதிராக பாாிய எதிா்பலைகளை உருவாக்க வெகு நேரம் செல்லாது என்பதை அத்தனை பேரும் புாிந்து கொள்ள வேண்டும்.
மக்களுக்கு முன் நின்று அகிம்சை போராட்டங்களை நடத்த வேண்டியவா்கள் அரசாங்கத்துக்கு முன்டு கொடுத்துக்கொண்டு மக்கள் போராட்டங்களை தடுக்க வேண்டாம் என்று இத்தால் கண்ணியமாக கேட்டுக்கொள்கின்றோம்.