பிரதான செய்திகள்

குர்­ஆன் அவ­ம­திப்பு முறைப்பாடு விசாரணை செய்யவில்லை! ஆணைக்­கு­ழுவில் மீண்டும் முறைப்பாடு

பொது­ப­ல­சேனா அமைப்பின் உறுப்­பினர் ஒருவர் குர்­ஆனை அவ­ம­தித்து வெறுப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் வகையில் பேசி­ய­தற்கு எதி­ராக 2015ஆம் ஆண்டில் மத விவ­கா­ரங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்­பாடு செய்தும் அது விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
இது மனித உரிமை மீற­லாகும் என மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நேற்று முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது.

பொரளை பள்­ளி­வாசல் உப­த­லைவர் எம்.எம்.எம். ரிகாஸ், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஊடாக இந்த முறைப்­பாட்­டினைச் செய்­துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லின்­போது அநு­ரா­த­பு­ரத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பின் வேட்­பாளர் ஒரு­வரே குர்­ஆனை அவ­ம­திக்கும் வகையில் பேசி­ய­தாக முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

பொலிஸ் விசேட பிரிவில் முறைப்­பாடு செய்தும் எது­வித விசா­ர­ணையும் நடை­பெ­ற­வில்­லை­யெ­னவும் தற்­போது பொலிஸ் விசேட பிரிவு மூடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்

wpengine

மரக்கறிகளின் விலை உயர்வு

wpengine

முன்னால் அமைச்சர்,இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் பதவி கோரி மன்றாட்டம்

wpengine