பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக அ.இ.ம.கா.

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் சிறுபான்மை கட்சியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தற்போது இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும்,குருநாகல் மாநகர சபையின் உறுப்பினருமான மெ.அசாரூதீன் எமது வன்னி நியூஸ் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை பெரும்பான்மை கட்சிகள் 51 வீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புதிய தவிசாளரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் ஏனைய பெரும்பான்மை கட்சிகளுக்கு ஆட்சியினை தீர்மானிக்கும்,பேரம் பேசும் சக்தியாக இருப்பதாக தெரிவித்தார்.

எமது கட்சி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எமது தலைவர் தெரிவிப்பார் அந்த வேளையில் நாங்கள் வாக்களிப்போம், எனவும் கூறினார்.

பெரும்பான்மை கட்சிகள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும்,கட்சி தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts

மன்னார் மாவட்டத்தில் நேர்முகத்தேர்வுகள் 17 தொடக்கம் 20 ஆம் திகதி வரை

wpengine

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன், 10 பேர்ச் காணி.!

Maash

நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.

wpengine