பிரதான செய்திகள்

குரங்குகளை பிடித்து ஒரு தீவுக்கு அனுப்பும் திட்டம் ஆரம்பம் , “விவசாய அமைச்சர்”

குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

Related posts

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து மதுரங்குளி ஆர்ப்பாட்டம் (படம்)

wpengine

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

Maash

பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும்-இராஜாங்க அமைச்சர்

wpengine