மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார்.
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார்.
அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர், பின்வருமாறு எழுதியிருந்தார்.
மாஷா அழ்ழாஹ்- அவன் நாடிவிட்டான்
——————————————————————
ஹக்கீமின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட, அவர் எப்போது ஏறாவூர் சென்று என்னைப்பற்றி பேசுவார் என்று காத்திருந்தேன்.
இன்று றவூப் ஹக்கீம் எனது தாய் மண்ணான ஏறாவூருக்குச் சென்று, நான் கடந்த காலத்தில் மஹிந்த அரசுக்கு நமது கட்சியைக் காட்டிக் கொடுத்ததாகப் பேசியுள்ளார்.
இல்லவே இல்லை. ஹக்கீம் செய்த அநாகரீகமானதும், இஸ்லாத்துக்கு புறம்பானதும், மனிதப் பண்பைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு சமனானதும், சட்டரீதியாக நாம் அனைவரும் அகப்பட்டுக் கொள்ளும் வகையிலானதுமான செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தையும், நமது கட்சியையும் காப்பாற்றுவதற்காகவே மஹிந்த அரசுடன் ஒட்டவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. புலிகளையே அழித்த மஹிந்தவுக்கு பலவீனமான முஸ்லிம் சமூகத்தை அழிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்?
கீழே உள்ள ஆதாரத்தைப் பாருங்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையும் நமது சமூகத்துக்கு அரசியல் சிறையும் கிடைத்திருக்கும்; நான் அவதானமாக இல்லாதிருந்திருந்தால்.
மஹிந்தவிடம் மூன்று ஆவணங்கள் இருந்தன அதில் இது ஒன்று. இரண்டாவது அவரின் அமைச்சுக் கொள்ளை பற்றியது. மூன்றாவதை பிறகு சொல்கிறேன் ஆதாரத்தோடு.
சிங்களத்தில் இருக்கும் இவ்வாவணத்தை அவசரமாக தமிழ் மொழியில் பெயர்க்கவேண்டி ஏற்பட்டதால் விளைந்த தவறுகளை மனங்கொள்ள வேண்டுகிறேன்.
இது பற்றி ஹக்கீம் உட்பட எவருடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன்.
o
இனி, குமாரி குரே வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டினை நீங்கள் படிக்கலாம். குமாரி வழங்கிய முறைப்பாட்டில் நபர்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் எவ்வாறு சொல்லப்பட்டிருந்தனவோ, அவ்வாறே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரி அறிமுகம்
மேரியன் குமாரி லங்கா குரே, தேசிய அடையாள அட்டை இலக்கம் 656270128V . விலாசம் 5/6, ரோயல் கோட், பேத்திரிஸ் ரோட், கொழும்பு – 03. தொழில் இல்லை. விவாகரத்துச் செய்த சிங்கள கத்தோலிக்கர். பின்வருமாறு அறிவிக்கின்றார்.
மேற்படி விலாசத்தில் நான் வசித்திருந்தேன். முன்னர் ஹரல்ட் விஜேசிங்க என்பவரை திருமணம் செய்திருந்தேன். தற்போது அவரிடமிருந்து சட்ட முறையாக விவாகரத்துப் பெற்றுள்ளேன்.
சந்திப்பும் சரசமும்
2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அந்த சந்திப்பின் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அதன் பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
ரஊப் ஹக்கீமுடைய நண்பர் ஒருவருக்குச் சொந்தமான ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் திட்டத்தின் 15 – 0 – 3B வீட்டில் நாம் தொடர்ந்து சந்தித்தோம். அங்கு நாம் உறவுறவில் ஈடுபட்டோம்.
அப்போது ஹரல்ட் விஜேசிங்கவை நான் விவகாரத்து செய்திருந்த போதிலும், கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையிலுள்ள K/1/6 அடுக்கு வீடொன்றில், ஹரல் விஜேசிங்கவுடன்தான் நாம் வசித்து வந்தோம்.
ரஊப் ஹக்கீமை நான் சந்தித்த நாட்களில், வீட்டுக்கு போக வேண்டாம் என்று என்னை அவர் வற்புறுத்தினார். கணவரை விட்டு விட்டு, அவரோடு வரும்படி கூறினார். என்னை திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்தார்.
குடியும் கூத்தும்
கொழும்பு, ப்ளவர் வீதியில் வசித்த ஹக்கீமுடைய நண்பர் ரஞ்சன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் நானும் ஹக்கீமும் சந்தித்தோம். அப்படி சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம். பெரும்பாலும் கிழமையில் மூன்று நாட்கள் இவ்வாறு நாங்கள் சந்தித்தோம்.
மேலும், கண்டியில் ஏர்ல் ஏஜன்சி, மகாவலி ரீச் ஆகிய இடங்களிலும் நாங்கள் சந்தித்தோம்.
இவ்வாறு நாங்கள் சந்தித்த எல்லா சந்தர்ப்பங்களிலும் ஹக்கீம் மதுபானம் அருந்தியிருந்தார்.
தன்னுடைய மனைவியுடன் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடவில்லை என்றும், அதன் காரணமாகவே என்னுடன் உடலுறவில் ஈடுபட ஆரம்பித்ததாகவும், என்னிடம் ஹக்கீம் எப்போதும் கூறுவார்.
மேலும், எனது பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அவரிடம் வருமாறு அழைத்தார். என்னை சந்தித்த எல்லா வேளைகளிலும், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க கல்கிஸ்சை சேர்குலா வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினை (வீட்டு இலக்கம் நினைவில்லை) வாடகைக்கு எடுத்து அங்கே வசிக்கத் தொடங்கினேன். ரஊப் ஹக்கீம்தான் அந்த வீட்டுக்கு வாடகை செலுத்தினார். அந்த வீட்டுக்கு நான் மட்டும்தான் சென்றிருந்தேன். அந்த வீட்டுக்கும் அடிக்கடி ஹக்கீம் வந்தார். சில நாட்கள் அந்த வீட்டில் என்னுடன் அவர் இரவைக் கழித்திருக்கின்றார்.
பின்னர், ஜாஎல தேவாசிபுர இலக்கம் 20, எனும் இடத்தில் வீடு ஒன்றினை 2003ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாடகைக்கு எடுத்து அங்கே தங்கினேன். அந்த வீட்டையும் ரஊப் ஹக்கீம்தான் எனக்கு எடுத்துத் தந்தார். அங்கும் அடிக்கடி ரஊப் ஹக்கீம் வந்து போனார்.
தெவிட்டத் தொடங்கிய காதல்
இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி மூலமாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவருடைய தொலைபேசியை நிறுத்தி (ஸ்விச்ட் ஒஃப்) வைத்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை, அவர் என்னை பார்க்க வரவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் 14ஆம் திகதி அல்லது நெருங்கிய நாளொன்றில் அவருடைய நண்பர் ரஞ்சனின் வீட்டுக்குப் போனேன். அப்போது ஹக்கீமுடைய ஜீப் அந்த இடத்தில் நின்றது. எனவே, உள்ளே சென்றேன். அங்கு ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் ஹக்கீம் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பெண் யார் என்று நான் கேட்டேன். அதனால், எங்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தை விட்டும் நான் சென்றேன்.
ஆசையும் மோசமும்
அதன் பிறகு 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி வரை நாம் சந்திக்கவில்லை. தொலைபேசியில் மட்டும் கதைத்தோம். அப்படி பேசும் சந்தர்ப்பங்களிலெல்லாம் திரும்பவும் வரும்படி என்னை வேண்டினார். என்னை அவர் திருமணம் செய்யும் நோக்கத்துடன், இஸ்லாத்தை கற்பதற்காக வெள்ளவத்தையிலுள்ள அல் சிதாயா எனும் மார்க்கம் கற்பிக்கும் இடத்தில் என்னை சேர்த்தார்.
2004 ஏப்ரல் 13ஆம் திகதி, கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வீட்டுக்கு, ஹக்கீமை சந்திப்பதற்காக நான் சென்றேன். அவர் அங்கு இல்லை என்று சேவகர்கள் எனக்குக் கூறினார்கள். எனினும், அவர் அங்கே இருப்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே, அவர் வரும்வரை வாயிற் கதவு அருகே நின்றேன். அப்போது இஷார் பதுர்தீன், நஜ்மி மஜீத், அமீர் அலி மற்றும் இன்னும் பலர் ஹக்கீமை சந்திக்க வந்தனர். நான் அங்கிருந்ததால், ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஹக்கீமை சந்திக்க வந்ததாகச் சொன்னேன். ஹக்கீமை சந்தித்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வேன் என்று கூறினேன். அவர்கள் எனக்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். பிரச்சினையைக் கூறும்படி கேட்டார்கள். அதனால், அவர்களிடம் எல்லாவற்றையும் நான் கூறினேன்.
அம்பலம்
எனக்கு அநியாயம் நடந்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். என்னை திருமணம் முடிப்பதாக ஹக்கீம் கூறியிருந்தால், அதனை நிறைவேற்ற வேண்டும் என்றார்கள். எனவே, இது தொடர்பில் ஹக்கீமுடன் கதைத்து ஒரு நல்ல முடிவினை எடுக்க வேண்டுமென்றும் என்றார்கள். அதேவேளை, இது கட்சிக்கு பெரும் அவமானம் என்றும் கூறினார்கள். மேலும், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். பிறகு இதைப்பற்றி ஹக்கீமிடம் விசாரித்திருந்தார்கள். இதனையடுத்து, இது குறித்து ஹக்கீம் என்னிடம் விசாரித்ததோடு, என்னை அச்சுறுத்தினார். எனவே, ஒருவரும் அறியாத வகையில் இன்டகொன்டினன்டல் ஹோட்டலில் நான் ஒளிந்திருந்தேன்.
அதன் பிறகு எனக்கு நடந்த அநியாயம் தொடர்பாக, மேலே கூறிய இஷார் பதுர்தீன், நஜ்மி மஜீத், அமீர் அலி ஆகியோர் என்னிடம், இது விடயமாக வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்கு விருப்பமா என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் உடன்பட்டேன். 2004 ஏப்ரல் 14 ஆம் திகதி என்னுடைய முழுமையான வாக்கு மூலத்தை அவர்கள் வீடியோ செய்தார்கள். அந்த வீடியோவை 2004 மே மாதம் 30 ஆம் திகதி, தேசிய ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பினார்கள்.
இவை அனைத்தும் உண்மையானவை.
தம்பிக்கு உதவிய அண்ணன்
நான் ஹோட்டலில் தங்கிய பிறகு என்னைத் தேடிப்பார்க்க முயன்றார் என்பதை அறிந்து கொண்டேன். எனது பணியாளர்களான நெலும் மற்றும் சந்தன ஊடாக என்னைத் தேடியதாக அறிந்தேன். ஹக்கீமுடைய சகோதரர் ஹஸீர் மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் ஒப்ரோயி கிரஸ்கட் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். அங்கு ஹக்கீம் என்னைச் சந்தித்தார். அந்த வீட்டு இலக்கம் ஞாபகமில்லை. அங்கு நானும் ஹக்கீமும் தனிமையில் கதைத்தோம். பிறகு நாம் பஷீரின் வீட்டில் சந்திக்கத் தீர்மானித்தோம்.
அடுத்த நாள் நான் பஷீரின் வீட்டுக்குப் போனேன். அச்சந்தர்ப்பத்தில் அதுவரை நடந்த எல்லா விடயங்களையும் ஹக்கீமிடம் கூறினேன். அப்போது ஹக்கீம் என்னிடம்; நிஷார் பதுர்தீனிடம் கதைக்கும் போது, அதனை வீடியோ செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். முன்பு போல் என்னோடு பழகுவதாகவும், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். அதனால், அவர் கேட்டதை நான் ஒப்புக் கொண்டேன்.
நான் இருந்த இன்டகொன்டினன்டல் ஹோட்டல் அறைக்கு முன் அறையில் பஷீர் மற்றும் ராஜன் தங்கியிருந்தனர். வீடியோ கமரா எனது அறையின் குளிரூட்டி (எயார் கண்டிசன்) இயந்திரத்தினுள் வைக்கப்பட்டது. எனது கட்டிலின் பின்பக்கம் ரெகோடர் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி எல்லா சம்பவங்களும் வீடியோ செய்யப்பட்டன.
அதே இரவு, பஷீரின் அறிவித்தலுக்கு இணங்க, லக்கி ப்ளாஸா வீடு ஒன்றில் ஹக்கீமை நான் சந்தித்தேன். அந்த வீட்டில் என்னை தங்குமாறு அவர் கூறினார். அதனையடுத்து, மீண்டும் நாங்கள் இருவரும் முன்னர் போல் சேர்ந்து உறவு கொண்டாடினோம்.
ஆனாலும், அவர் வீட்டிலிருந்து வெளியேறும்போது, நான் வெளியே செல்ல முடியாதவாறு உள்ளே அடைத்துவைத்து , வெளியே பூட்டுப் போட்டு விட்டு, சாவியை எடுத்துச் சென்றார்.
அந்த வீட்டில் என்னால் மேலும் இருக்க முடியாது என்று சொன்னேன். அதனால், மூன்று நாட்கள் பஷீரின் வீட்டில் என்னை இருக்கச் செய்தார். பின்னர் ரேணுகா ஹோட்டலில் என்னை தங்கச் செய்தார். அதன் பின்னர், லசந்த விக்ரமதுங்கவுடன் ஹக்கீம் என்னைச் சந்திக்க வந்தார்.
மோசடி
லசந்தவும் ஹக்கீமும் ஜனாதிபதிக்கு (அப்போது சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியில் இருந்தார்) ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள். அதன்படி, லசந்த சொல்லித் தந்தபடி, எம்.ரி.வி. நிறுவனத்தின் கமரா முன்னிலையில் ஒரு நேர்காணலை நான் வழங்கினேன். அந்த இடத்தில் லசந்த விக்ரமதுங்க, ரஊப் ஹக்கீம், பசீர் சேகுதாவுத் மற்றும் எம்.ரி.வி. நிறுவன அதிகாரிகள் இருந்தனர். ஹக்கீமை நம்பியதாலும் அவர் என்னைத் திருமணம் செய்வார் என்கிற நம்பிக்கையினாலுமே நான் இவ்றினையெல்லாம் செய்தேன்.
என்னுடைய நேர்காணல் 2004 மே மாதம் 30ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியானது. 2004 ஏப்ரல் 14ஆம் திகதி நான் வழங்கிய உண்மையான வீடியோ வாக்கு மூலம், 2004 மே 30 ஆம் திகதியன்று ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பானது.
அன்றிரவு நான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து, மேலே எனது விலாசமாக குறிப்பிட்டுள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அடுத்த நாள் 2004 மே 31 ஆம் திகதி, எம்.ரி.வி. அலைவரிசையின் குட் மோனிங் எனும் நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் இணைத்து பேசினார்கள். அதன்போது நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று ஹக்கீம் மற்றும் லசந்த ஆகியோர் சொல்லித் தந்திருந்தார்கள். அதன்படி ஜனாதிபதியினை தொடர்புபடுத்தி அந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன். அவ்வாறு நான் கூறிய விடயங்கள் அனைத்தும் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் முரணானவையாகும். ஹக்கீமும் லசந்த விக்ரமதுங்கவும் சொல்லித் தந்தவாறு கதைகளை உருவாக்கி கூறினேன்.
சதி
பின்னர் ரூபவாஹினியிலும், ஐ.ரி.என். அலைவரிசையிலும் என்னைப் பற்றி ஒளிபரப்பானவை அனைத்தும் பொய் என்று கூறுமாறும், பொது முன்னணியினரின் செல்வாக்கு காரணமாகவே இவ்வாறு நடந்ததாகவும், றிசாத் பதுர்தீனும் ஜனாதிபதியும் என்னை பயமுறுத்தினார்கள் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் கூறுமாறு, ரஊப் ஹக்கீம் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும் நான் அதை நிராகரித்தேன். 2004 ஓகஸ்ட் 18 ஆம் திகதி நான் சிங்கப்பூர் சென்றேன். என்னுடன் பஷீர், ராஜன், ராஜனின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வந்தனர். இரண்டு நாட்களின் பின்னர் சிங்கப்பூருக்கு ஹக்கீம் வந்தார். அங்கு நிவ் பாக் ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கு எல்லோர் முன்னிலையிலும் வைத்து, 2004 செப்டம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் என்னை திருமணம் செய்வதாக உறுதியளித்தார்.
2004 ஓகஸ்ட் 25ஆம் திகதி ஹக்கீம் இலங்கை திரும்பினார். மறுநாள் 2004 ஓகஸ்ட் 26ஆம் திகதி நான் இலங்கை வந்தேன். இந்த நிலையில், 2004 செப்டம்பர் 23ஆம் திகதி வரை ஹக்கீம் என்னைத் திருமணம் செய்யவில்லை. அதனால் நான் மிகவும் வெறுப்படைந்தேன். இதன்போது, ஹக்கீம் மீண்டும் என்னை ஏமாற்றியதைப் புரிந்து கொண்டேன்.
இவ்வாறானதொரு நிலையில், ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். அலைவரிசைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் பொருட்டு, அதற்குரிய ஆவணங்களுடன் என்னை ஹக்கீம் சந்தித்தார். அந்த ஆவணங்களில் உண்மைகளைப் பொய்யாக்கியும், பொய்களை உண்மையாக்கியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், அதற்றினை நான் நிராகரித்தேன். மேலும், அரசியல் லாபம் பெறுவதற்காக என்னை அவர் ஏமாற்றியிருதமையினை நான் விளங்கிக் கொண்டேன்.
மேலும், கடந்த இரண்டு மாதமாக அவர் எனக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதனால், அவருடன் உடலுறவில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை.
போதை ஆட்டம்
2005 ஓகஸ்ட் 08 ஆம் திகதி, முழுமையாக மரு அருந்திய நிலையில் வந்த ஹக்கீம், தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறினார். நான் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் அவர் என்னை அடித்தார். இப்படி தொடர்ந்தும் அவர் என்னை அடித்ததமை, அண்டை வீட்டார்களுக்குக் கேட்டிருக்கிறது. அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள்.
இப்போது என்னை கொலை செய்து விடுவதாக, அடிக்கடி அச்சுறுத்துகிறார். அதனால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறைப்பாடு தொடர்பாக, விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.