(பசீர் சேகுதாவூர் முகநூல்)
எனது கட்சியின் உச்ச பீடத்தில் இன்னும் ஒட்டியிருந்து உதிரம் குடிக்கும் அட்டைகளுக்கும், போலிகளுக்கும், கூலிக்கு மாரடிக்கும் கூத்தர்களுக்கும் எத்தனை உண்மைகளை என்ன வடிவத்தில் உரைத்தாலும் உறைக்காது என்பது எனக்குத் தெரியும். ஆயினும் கட்சியையும் சமூகத்தையும் நேசிக்கும் பல மேதகு உறுப்பினர்கள் இன்னும் உச்சபீடத்தில் உள்ளனர் என்பதை அறிந்தவனாகவும், இவர்கள் தகுந்த தருணத்தில் இயக்கத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்குவார்கள் என நம்பியவனாகவும் இப்பதிவை இடுகிறேன்.
வரலாற்று உண்மைகளைச் சரியான படிம அடிப்படையில் ஆதாரபூர்வமாக மக்கள் முன் வைக்கிற கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்கு நோன்பு காலத்தை விட வேறு எந்த நல்ல நேரத்தைத்தான் தெரிவு செய்வது?
நான் சில நாட்களுக்கு முன்பு குமாரியின் மரணத்தை மீள் கேள்விக்குட்படுத்த விரும்பும் பெண்கள் வெகுசன அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடாத்த முனைந்த போராட்டத்தைப் பற்றி பதிவொன்றை இட்டிருந்தேன்.
இது விடயத்தில் என்ன நடந்தது என்பதைக் குமாரி கூரேயின் தம்பி “மான்ன மறக்கலகே விஜித்குமார் தயாப்ரிய கூரே” கூறுகிறார். சிங்கள மொழி தெரிந்தோர் தெரியாதோருக்குத் தமிழ் மொழியில் பெயர்த்துக் கூறினால் நன்று.
இதற்கும், தவமிருந்து கவிதை எழுதிப் பரிசு வாங்குவோர் முயற்சிக்கலாம். இறைச்சி பரிசாக வழங்கப்படும். மாத்திரமல்ல, எள்ளளவும் ஆத்திரப்படாமல் மேலும் ஆதாரங்கள் மக்கள் முன் வைக்கப்படும்.