(கரீம் ஏ. மிஸ்காத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியூதீனின் முயற்சியினால் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மற்றும் புத்தளம் மக்கள் ஆகியோரின் நன்மை கருதி புத்தளத்தில் உள்ள பல கிராமங்களுக்கும், காபட் வீதிகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாகனங்கள், பாதசாரிகள் பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் செல்லக்கூடிய வகையிலே காணப்படும் தூசியும், குன்றும் குழியுமாகவும், மழை காலங்களில் சேறும் சகதியுமாக விளங்கும் வீதிகளுக்கு காபட் வீதியதாக மாற்றும் செயல்திட்டத்தில் ஒரு அங்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி புத்தளம், தில்லையடி, அல்- ஜித்தா கிராமத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் காபட் இடும் பணியை ஆராம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச்.எம். நவவி, முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.